வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தமிழ் தேசிய பசுமை இயக்க தலைவருமான ஐங்கரநேசனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல...
வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தமிழ் தேசிய பசுமை இயக்க தலைவருமான ஐங்கரநேசனுக்கு எதிராக கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மாவீரர் தினம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குககான
தடையுத்தரவை பெற்றுக்கொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் அரசடி வீதியிலுள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற போலீசார் இன்று நீதிமன்றுக்கு
சமூகமளிக்குமாறு அறிவித்தலை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.