பல்கலைக்கழகங்களின் நிர்வாக பணிகள் பாதிக்கப்படாத வகையில், சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றி சூழ்நிலைக்கேற்றவாறு பல்கலைக் கழகங்களின் ...
பல்கலைக்கழகங்களின் நிர்வாக பணிகள் பாதிக்கப்படாத வகையில், சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றி சூழ்நிலைக்கேற்றவாறு பல்கலைக் கழகங்களின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்குரியது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு இணைய வழியான கற்றல் இடம்பெற்றுள்ள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மூத்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவித்துள்ளார்.