யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மாணவர்கள் இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அவர்களை விடுவிப்பதற்கான முனைப்பில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது வரையில் பல்கலைக்கழகச் சூழலில் குழப்ப நிலை நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை பெருமளவில் மக்களை அணிதிரண்டு வருமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.