தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நடவடி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நடவடிக்கை அரசாங்கத்தினால் முற்றாக மீளப்பெறப்பட்டுள்ளது.
இன்று காலை தனது பாதுகாப்புக் கடமையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டதாக சுமந்திரன் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்த அறிவிப்பு விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும் தனக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமந்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவிக்கிறார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியின் எதிர்நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சுமந்திரனை கொலை செய்வதற்காக சதித்தட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலேயே கடந்த சில வருடங்களாக அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.