முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு வயல் பகுதியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) மாலை 4 மணியளவில் இடம்பெற்...
முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு வயல் பகுதியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (15) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குமுழமுனை மற்றும் வற்றாப்பளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரவாகிய நிலையில், குறித்த 3 விவசாயிகளும் வீடு திரும்பாத நிலையில், அவர்களை தேடி உறவினர்கள் சென்றுள்ளனர்.
இதன்போதே, மூவரும் சடலமாக காணப்பட்டதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த மூன்று விவசாயிகளின் சடலங்களும் அதே விவசாய நிலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.