மலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின்...
மலையக மக்கள் முன்னணியை ஆணிவேரோடு அழித்துக்கொண்டிருக்கும் ஒரு சில வெத்து வேட்டுக்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதாலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என சட்டத்தரணியும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
மேலும் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களது 64 வது பிறந்த தினம் இன்றாகும்! கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதுமாக பாதிக்கப்பட்ட எம் மக்கள் இப்போதுதான் பொருளாதார ரீதியில் ஸ்திரத்தன்மையை அடைய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் எம் மக்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடாத்தகூடாது என்பதாலேயே நாம் பொதுக்கூட்டங்கள் நடாத்துவதை தவிர்த்து வருகிறோம்.
ஆனால் மக்களை பற்றி துளியேனும் கவலைப்படாத ஒருசில மக்கள் பிரதிநிதிகள் அவர் வருகிறார் இவர் வருகிறார் என மக்களை ஒன்று திரட்டி சாணக்கியமற்ற அரசியல் பம்மாத்துகளை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இம்முறை மலையகத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற ஒரு சில வெத்து வேட்டுகளலேயே எம் மக்களின் பொருளாதார நிலை அதள பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மற்றவர்களை விமர்சிப்பதை விட பாராளுமன்றுக்கு தெரிவாகி ஒரு வருடமாகப்போகிறது. இதுவரையில் இவர்களை தெரிவு செய்த மக்களுக்காக என்ன சேவைகளை செய்துவிட்டார்கள்? வெறுமனே மேடைகளில் பேசி காலத்தை கடத்துபவர்களிடமிருந்து இதைவிட வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?
அதைவிட இன்றைய தினம் எனது தந்தையும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் சந்திரசேகரன் அவர்களின் 64 வது பிறந்த தினம். இதைக்கூட 61வது பிறந்த தினமாக கொண்டாடி அரசியலாக்கி ஒரு மாபெரும் தலைவருக்கு களங்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் முன்னணியினர்.
இவர்களை போன்றவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்து மக்கள் செய்த தவறை தற்போது உணருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.