நாடுமுழுவதும் இன்று பயணக்கட்டுப்பாடு தளர்ந்தப்பட்ட போதும் வெளியில் சென்ற ஊடகவியலாளர்கள் ஒரு சிலரை யாழ்ப்பாண பொலிஸார் அனுமதி இல்லை என மறித்...
நாடுமுழுவதும் இன்று பயணக்கட்டுப்பாடு தளர்ந்தப்பட்ட போதும் வெளியில் சென்ற ஊடகவியலாளர்கள் ஒரு சிலரை யாழ்ப்பாண பொலிஸார் அனுமதி இல்லை என மறித்துள்ளனர்.
பயணத்தடை நடைமுறையில் உள்ள காலங்களில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை செய்ய முடியுமென அரசு அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் பயணத்தடை இன்று காலை 4 மணிக்கு தளர்த்தட்டுள்ளது. இன்று மக்கள் சில நடைமுறைகளை பின்பற்றி வெளியில் செல்ல முடியும் என அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் தமது அலுவலகத்திற்கு சென்ற ஊடகவியலாளர் இடைமறிக்கப்பட்டு வெளியில் செல்ல அனுமதி இல்லை என யாழ்ப்பாண பொலிஸார் கூறியுள்ளனர்.
அரசாங்கம் நாடு முழுவதும் ஒரு பொதுவான அறிவிப்புகளை விடுக்கும் போது யாழ்ப்பாண பொலிஸார் மாத்திரம் தனியான நடைமுறைகளை அமுழ்ப்படுத்துவது ஏன் ஏனும் கேள்வி எழுந்துள்ளது.