அம்பன் புயலினால் யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை செய்கையாளர்களுக்கான இழப்பீட்டு பணம் வங்கிகளில் வைப்பிடப்பட்டுள்ள நிலையில் வைப்பிடப்பட்...
அம்பன் புயலினால் யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வாழை செய்கையாளர்களுக்கான இழப்பீட்டு பணம் வங்கிகளில் வைப்பிடப்பட்டுள்ள நிலையில் வைப்பிடப்பட்ட பணத்தை பெறமுடியாமல் உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ள நிலையில்,
“நான் வந்துவிட்டேன்னு சொல்லு..” என சினிமா பாணியில் கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ், அரசு வழங்கியிருக்கும் நியமங்களுக்கு அமைவாக வங்கிகளை திறக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் கூறியிருக்கின்றார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்மன் புயலால் பாதிக்கப்பட்ட வாழைக்குலை செய்தியாளர்களுக்கு எனது முயற்சியில் அப்போட்டி நிதி வழங்கப்பட்டது. கொரோனா நிலைமை காரணமாக அவர்களுக்கான நிதி அதிகமாக வாங்கில் வைப்பிலிடப்பட்டது.
பிரதேசங்களிலுள் உள்ள சம்பந்தப்பட்ட வங்கிகள் திறக்கப்படாததால் மக்கள் குறித்த நிதியை வர முடியாமல் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.ஆகவே நான் இப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டேன் குறித்த விடயம் தொடர்பில்
பார்த்துக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.