ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர...
ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் இன்று (10) பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இத்தாலியின் அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் தலைமை உரை ஆற்றுமாறு கிடைத்த அழைப்பொன்றிற்கு அமைய கௌரவ பிரதமர் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
'கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களுக்கிடையே புரிதல்' எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு இடம்பெறவுள்ளது.
இவ்விஜயத்தின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இராஜதந்திர சந்திப்புகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
குறித்த இராஜதந்திர சந்திப்பின்போது இத்தாலி ஜனாதிபதி கௌரவ மரியோ ட்ராகி (Mario Draghi), ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் கௌரவ டேவிட் சசோலி (David Sassoli ) மற்றும் ஸ்லோவேனியா ஜனாதிபதி கௌரவ பொருட் பாஹோர் (Borut Pahor) உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார்.