இணையத்தள ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) இன்று(02) மாலை காலமானார். கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஷ், சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டுவ...
இணையத்தள ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) இன்று(02) மாலை காலமானார்.
கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஷ், சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டுவந்தார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்று(01) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று மாலை திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.