மூன்று வகையான அரிசி வகைகளுக்கு புதிய சில்லறை விற்பனை விலையை, அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று (28) அறிவித்துள்ளனர். இதன்படி, ஒரு கிலோகிராம் ந...
மூன்று வகையான அரிசி வகைகளுக்கு புதிய சில்லறை விற்பனை விலையை, அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று (28) அறிவித்துள்ளனர்.
இதன்படி, ஒரு கிலோகிராம் நாட்டரிசி 115 ரூபாவிற்கும், சம்பா அரிசி 140 ரூபாவிற்கும், கீரி சம்பா அரிசி 165 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவய் டட்லி சிறிசேன, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசி 62.50 ரூபாவிற்குழ், சம்பா 70 ரூபாவிற்கும், கீரி சம்பா 80 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
அரிசிக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அடங்களான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதற்கு அமைச்சரவை நேற்று (27) தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.