பிரபல போதைப்பொருள் வர்த்தகராக கருதப்படும் சன்சைன் சுதா என அழைக்கப்படும் ஹெட்டிஹெவாகே அமில பிரசன்ன துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள...
பிரபல போதைப்பொருள் வர்த்தகராக கருதப்படும் சன்சைன் சுதா என அழைக்கப்படும் ஹெட்டிஹெவாகே அமில பிரசன்ன துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று முற்பகல் 11.55 அளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை – கொடபொல – வறகாபிட்டிய பாடசாலைக்கு அருகில் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த சன்சைன் சுதா மீது, சிலர் துப்பாக்கிப பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்