யாழ் மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று நோய் நீங்க வேண்டி திரு கந்தசாமி கருணாகரனின் ஒருங்கினைப்பில் திருச்சபைகளின் கூட்டு ஆராதானை யாழ்ப்பாணம் ...
யாழ் மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று நோய் நீங்க வேண்டி திரு கந்தசாமி கருணாகரனின் ஒருங்கினைப்பில் திருச்சபைகளின் கூட்டு ஆராதானை யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலலயத்தில் இடம்பெற்றது
நேற்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட
இவ் கூட்டு ஆராதனையானது யாழ் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ஜஸ்டின் பேர்னட் ஞாப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.
இவ் ஆராதானையில் ஒவ்வொரு திருச்சபைகளினதும் மதகுருமார்களால் விசேட ஜெபமும் அதனை தொடர்ந்து ஆராதனைகளும் இடம்பெற்றது.
இதன்போது கொவிட் தொற்றிற்கு மத்தியில் தமது அயராத சேவையை வழங்கும் அனைத்து சேவை வழங்குனர்களின் நலனிற்காகவும்,
பொதுமக்களின் சுகநலம் வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம்,
ஒருங்கினைப்பாளர் கந்தசாமி கருனாகரன்,
வடமாகாண கோவிட் 19 பிரதானியும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியுமான ஜெகத் கொடிதுவக்குவின் சார்பில் மேஜர் ஜெனரல் புஸ்ஸல்லாவவும்,
திருச்சபைகளின் மதகுருக்களும்,
இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அண்மையில் கொரோனா தொற்று நீங்க வேண்டி கந்தசாமி கருணாகரனால் இந்து ,பௌத்த வழிபாடுகளும் யாழில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது