மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர்...
மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
தற்போது மார்பக புற்றுநோயால் அதிகளவான பெண்கள் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் வருடத்திற்கு 4,500 க்கும் அதிகமான மார்பக புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.