யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 200 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் சற்...
யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 200 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதால் யாழ்.மாவட்டப் பாடசாலைகள் இன்று நடைபெறாது என்று வடக்கு மாகாண ஆளுநர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
இன்றைய வகுப்புக்கள் பிறிதொரு நாளில் நடைபெறும் என்றும் அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதேசங்களின் வெள்ள நிலவரங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்க மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலர் ஊடாக பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
இன்று காலை 9 மணியளவில் ZOOM தொழில்நுட்பம் ஊடாக மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.