“எங்கள் நாவலர் ஐயாவின் ஆத்மா எனக்குள் இருந்து கேட்கும் வேண்டுகோளாக இதை எண்ணிக்கொள்ளுங்கள்” - நாவலர் அவர்களின் கொள்ளுப்பேரன் மு.விஸ்வேஸ்வ...
“எங்கள் நாவலர் ஐயாவின் ஆத்மா எனக்குள் இருந்து கேட்கும் வேண்டுகோளாக இதை எண்ணிக்கொள்ளுங்கள்” - நாவலர் அவர்களின் கொள்ளுப்பேரன் மு.விஸ்வேஸ்வரன் அவர்கள் நாவலர் கலாசார மண்டபம்தொடர்பாக உருக்கமான வேண்டுகோள் -
அதிகாரிகளுக்குப் பணிச்சுமைகள்அதிகம். அவர்கள் பணிகளை நிறைவேற்றுவதில், பலஇடர்பாடுகளை அதிகாரிகள் சந்திக்கவேண்டி வரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.இருப்பினும் எனது உள்ளக்கிடக்கையை இப்போது வெளிப்படுத்தத் தவறினால் அது நான்விடும் தவறாக அமைந்துவிடும். தவறுகள் இருப்பின் தயைகூர்ந்து மன்னிக்கவும் என்றுதெரிவித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் கொள்ளுப் பேரன், எங்கள் ஐயாவின் எண்ணங்களுக்கு எப்போதும்
செயல்வடிவம்கொடுத்துக்கொண்டிருப்போம் என்று சொல்லியே இங்கு மண்டபம் அமைத்தார்கள். பலதசாப்தங்களாக இங்கு அப்படி எந்த நிகழ்வுகளும் இடம்பெறவில்லை. அதற்காகத் தான்யாரையும் குறை சொல்லவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டுச்சூழல் - நிர்வாகத்தில் உள்ளவர்களின் மனநிலை - நாவலர் ஐயாவுக்குக் கொடுக்கின்றமுக்கியத்துவம் போன்றவை அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.நாவலர் ஐயா பிறந்த இடத்தில் அவருடையஉன்னத எண்ணங்களை ஈடேற்றும் வகையில் ஒரு மண்டபம் முன்னாள் அமைச்சர்திரு.செ.இராசதுரை அவர்கள் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அந்த மண்டபத்தில்நாவலர் ஐயாவின் நினைவுகளை மீட்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றன. அந்தவேளையிலே உள்நாட்டு யுத்தமும் உக்கிரம் அடைந்துகொண்டிருந்தது. அப்போது மாநகரசபையின் ஆணையாளராக இருந்த திரு. சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள்
மண்டபத்தைப்பொறுபேற்றுக் கொண்டார். அங்கு நூலகச் செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால்,நாட்டுச் சூழலோ அல்லது ஏதோ காரணங்களோ எனக்குச் சரியாகச் சொல்லத்தெரியவில்லை. நாவலர் தொடர்பான விடயங்களுக்கு அந்த மண்டபத்தில் முன்னுரிமைகொடுக்கப்பட்டு நான் கண்டதில்லை. அந்த வேதனை எனக்குள் இருந்தாலும் அதை நான் யாரிடமும் கேட்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.சில விடயங்கள் மற்றவர்கள்சொல்கிறார்களே என்பதற்காகச் செய்தால், அதில்உயிரோட்டம் இருக்காது. நமது எண்ணங்களே அதனைச் செயலாக வெளிப்படுத்த வேண்டும்.இப்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அந்தமண்டபத்தை எங்கள் நாவலர் ஐயாவின் நினைவிடமாக மாற்றும் பணிக்கு முனைப்புக் காட்டும்செய்திகளைப் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். அதற்கும் நிர்வாக ரீதியாகத் தடைகள் உள்ளன என்பதையும் அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகள் மூலம் அறிந்துகொண்டுமிகுந்த
மனவருத்தம் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தினர் எங்கள் நாவலர ஐயாவின்எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க முனைகிறார்கள். அதற்குத் தடையாக இருக்காதீர்கள்.உங்களின் விட்டுக்கொடுப்பு என்பது உங்களின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால்உங்களுக்கு எதுவும் நேர்ந்துவிடப் போவதில்லை. நல்லதை நமக்குச் செய்ய முன்வருபவரைத்தட்டிக்கொடுத்து இணைந்து செயலாற்ற முன்வாருங்கள். இதை எங்கள் நாவலர் ஐயா எனக்குள்இருந்து கேட்கும் உருக்கமான ஒரு வேண்டுகோளாக எண்ணிக்கொள்ளுங்கள் என்று யாழ்.மாநகரசபை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாவலர் ஐயாவை,நினைவு கூர்ந்து 2016 ஆம் ஆண்டில் இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்த செயற்பாட்டை நேரிற் கண்டுபிரமித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவர்களுள் தானும் ஒருவன் என்று குறிப்பிட்ட அவர்,நாவலர் ஐயாவின் கனவுகள் பலவென்று என் மூதாதையர்
சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் என்றும் சமயம் போதிக்கின்ற - சமயம் பற்றிய மெய்யானசெய்திகளை நம் சமூகத்திற்குச் சொல்லும் ஒரு கூட்டம் உருவாக வேண்டும் என்று நாவலர்ஐயா பெரிதும் விரும்பினார் என்று கூறிய அவர், நாவலருடைய கனவைஇந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆன்மிகப் பிரசாரகர்அணியினை உருவாக்குதல் என்ற செயற்பாடாக ஆரம்பித்த வேளை, அந்தஅங்குரார்ப்பண வைபவத்திலே தன்னையும் அழைத்தமையினை இந்தத் தருணத்திலே நன்றியோடுநினைவுகூருவதாகக் குறிப்பிட்டார்.எனது ஆத்மா இந்த மண்ணுலகை விட்டுநீங்கமுன் எனது அம்மப்பா கைலாசபிள்ளை அவர்களின் இடத்தில் அமையப்பெற்றகைலாசபிள்ளையார் ஆலயத்தின்
தென்கிழக்கு மூலையில் ஆறுமுகநாவலர் ஐயாவிற்கு ஒரு சிலைவைத்துத் தாருங்கள். அந்தச் சிலை வடிவில் என்னையாவை நான் எனது மூச்சுப் பிரியும்வரை வழிபாடாற்ற விரும்புகிறேன் என்று ஒரு அன்புக் கோரிக்கையினையும் இந்து சமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் முன்வைத்தார்.நாவலர் ஐயாவின் இருநூறாவது ஜனனதினத்தை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அவர் வாழ்ந்த இடத்திலே, நாவலர் ஐயா பெயரிலே கட்டப்பட்ட மண்டபத்தைப் புனரமைப்புச்செய்யப்போவதாகவும் பல செயற்பாடுகளை அங்கு முன்னெடுக்கப்போவது பிந்தினாலும் இந்தவிடயம் நடைபெறப் போகிறது என்பதில் சந்தோசம் என்று குறிப்பிட்ட அவர், நாவலர் ஐயாவின் ஆன்மபலம் அந்தநல்ல காரியத்திற்கு நிச்சயம் துணை நிற்கும் என்றும் கூறினார்.
மண்டபம் புனரமைக்கப்பட்ட பின்பு,யாழ்ப்பாணம் மாநகர சபை நூலகச் சேவையினைத் தொடர்ந்து அங்குமுன்னெடுப்பதற்கு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்ஆவணசெய்யவேண்டும் எனக் குறிப்பிட்ட நாவலர் அவர்களின் கொள்ளுப் பேரன், எல்லோரும் ஒன்றாய் இருந்தால் எம் முன்னோர்களின் ஆத்மா மகிழ்வடையும்.எங்களை மகிழ்வோடு ஆசிர்வதித்துக்கொண்டிருபார்கள் என்றும் தெரிவித்தார்