வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்...
வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் எதிர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.