யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட சுமார் 250 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருக்கின்றது. கொழும்பு நோக்கிச் சென்ற க...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட சுமார் 250 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் (15.01) வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து
இதனையடுத்து குறித்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்த போது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.
இதனை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச் சென்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.