வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ...
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்த 16 பேர் உட்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில்வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியான 16 பேர் அடங்கலாக 20 பேருக்கும்,
சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், பருத்தித்துறை வைத்தியசாலையில் 3 பேருக்கும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் 2 பேருக்கும்,
முழங்காவில் விமானப்படை முகாமில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.