நாட்டை பாதுகாக்க யார் முன் வந்தாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா இன்ற...
நாட்டை பாதுகாக்க யார் முன் வந்தாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று காலை முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. `மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள். நாட்டை காப்பதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்' என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டரில், ``நாட்டை காக்க அனைவரும் தயாராக இருங்கள். நாட்டை பாதுகாக்க யார் முன்வந்தாலும் அவர்களுக்கு ஆயுதங்கள் அளிக்கப்படும். இரண்டாவது உலகப் போர் சமயத்தில் நாசி ஜெர்மனி செய்தது போல, ரஷ்யா காலையிலிருந்து எங்கள் நாட்டை தவறான வழியில் தாக்கி வருகிறது. ஆனால், உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ளும். உக்ரைன் தனது சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, மாஸ்கோ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.