கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்...
கொழும்பிலுள்ள சீன தூதுவருக்கும், நிதி அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெடிக்கடி தொடர்பில், மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக சீன தூதரகத்தில் , டுவிட்டர் பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் கடினமான அனைத்து சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு சீனா, உதவி வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.