யாழ்.நகரில் பாரிய தீ பந்தப் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்கள் ஒழுங்கமைப்பு செய்துள்ளனர். குறித்த போராட்டம...
யாழ்.நகரில் பாரிய தீ பந்தப் போராட்டம் ஒன்றை நடாத்துவதற்கு ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்கள் ஒழுங்கமைப்பு செய்துள்ளனர்.
குறித்த போராட்டமானது காலிமுகத்திடலில் கோத்தபாய வீட்டுக்கு போ என கோசமெழுப்பியவாறு கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு
ஆதரவாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பங்குபற்றி
காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.