நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் விந்தன பிரசாத் கருணாரத்ன மீது, காலி முகத்திடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று (04) காலை நடத்த...
நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் விந்தன பிரசாத் கருணாரத்ன மீது, காலி முகத்திடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்று (04) காலை நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நியூஸ் பெஸ்ட் நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளில், விந்தன பிரசாத் கருணாரத்ன தொடர்ச்சியாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த ஒரு ஊடகவியலாளராவார்.
மிரிஹான பகுதியில் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போதும், விந்தன பிரசாத் கருணாரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், காலி முகத்திடலிலும் இன்று அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.