பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண...
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.
இதில், புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் பிரேரிக்கப்பட்டிருந்தது.
எதிரணியின் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்காரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 65 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
03 வாக்குகள் இதன்போது நிராகரிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.