இன்று காலை கொழும்பு களப்படைத் தலைமையகத்தில் இருந்து திருகோணமலைக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலமாக ஒரு குழுவொன்றை விமானப்படையினர் அழைத்துச் செ...
இன்று காலை கொழும்பு களப்படைத் தலைமையகத்தில் இருந்து திருகோணமலைக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலமாக ஒரு குழுவொன்றை விமானப்படையினர் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
எனினும், இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திருகோணமலையில் கடற்படைத் தளமும் விமானப்படைத் தளமும் உள்ளது.
மேலும் உள்நாட்டு விமான ஓடுதளமும், துறைமுகத்துடன் கூடிய கடல்வழி மார்க்கமும் திருகோணமலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.