இடர் காலத்தில் மக்கள் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வரும் ஊடகவியலாளர்களுக்கு சலுக முறையில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்...
இடர் காலத்தில் மக்கள் பிரச்சனைகளை வெளிக் கொண்டு வரும் ஊடகவியலாளர்களுக்கு சலுக முறையில் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடகிழக்கு இணைப்பாளர் அண்டனி ஜேசுதாஸ் கோரிக்கை முன்வைத்தார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை யார் தனியார் விடுதியை அன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களின் பிரச்சினை தொடர்பில் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களின் பணி மகத்தானது.
நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் கொரோனா காலப்பகுதி மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தமது கடமைகளை ஆற்றுவதற்கு எரிபொருள் பாரிய பிரச்சினையாக உள்ள நிலையில் அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி சலுகை விலையில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மேல மகத நாடு ஆட்சியாளர்களின் முறையற்ற பொருளாதார மற்றும் நிர்வாக செயற்பாடுகளினால் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
கோட்டா கோகோம் ரணில் கோகோம் எனக் கூறினார்கள் நாங்கள் இப்பொழுது பாராளுமன்றம் கோகோம் எனக் கூறுகின்றோம்.
ஏனெனில் மக்களின் எரிபொருள் பிரச்சனை எரிவாயு பிரச்சனை அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகிய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு பாராளுமன்றத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை.
எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு விதண்டாவாத கருத்துக்களை பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர மக்களின் தற்போதைய நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கான வழி காட்டி எதையும் முன்வைக்கவில்லை.
ஆகவே தான் நாம் கூறுகிறோம் ஒட்டுமொத்த பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு புத்திஜீவிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கல்விமான்களை உள்ளடக்கிய இடைக்கால பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.