எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இ...
எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய தற்போது டீசல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்மே தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் சேர்த்து, பஸ் கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.