வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பேரவைச் செயலக செயலாளர் செந்தில்நந்தனன் ஆகியோர் மாகாணத்திலிருந்து விடுவிக்கப்படுவதா...
வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் மற்றும் பேரவைச் செயலக செயலாளர் செந்தில்நந்தனன் ஆகியோர் மாகாணத்திலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்து வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
2022-08-01 முதல் வடமாகாணத்தில் இருந்து விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு நேற்று(26) மதியம் அவர்களுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான இ.இளங்கோவனின் இடத்திற்கு பதில் கடமையாக உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் நிரஞ்சனும் பேரவைச் செயலக செயலாளர் செந்தில்நந்தனன் இடத்திற்கு குகநாதன் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வடமாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் மற்றும் வடமாகாண கட்டிடத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரும் அப்பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதமே வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா.செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.