லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்காலத்தில் 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலையை 200 ரூபாவால...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை எதிர்காலத்தில் 50 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலையை 200 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், மக்களின் தற்போதைய அவல நிலையை கருத்தில் கொண்டு 50 ரூபாவால் மட்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று இன்று (10) நாட்டை வந்தடைய உள்ளது.
நாளை முதல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 140,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 3,700 மெற்றிக் தொன் எல்பி எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (11) மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ காஸ் மேலும் தெரிவித்துள்ளது.