தொடர்ச்சியாக எமது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைக்கும் மக்கள் அச்சமடைய வேண்டாம் முகாமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரி...
தொடர்ச்சியாக எமது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைக்கும் மக்கள் அச்சமடைய வேண்டாம் முகாமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவிப்பு
இன்றைய தினம் (01.08.2022) QR code நடைமுறையில் முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி சீரான முறையில் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது என முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மயில்வாகனம் ஸ்ரீதாசன் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கும்போது மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளினை பெற்றுக்கொள்கின்றார்கள் அவர்களின் சிரமம் படிப்படியாக குறையும் சூழ்நிலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் தொடர்ச்சியாக எரிபொருட்கள் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றது என நம்புகின்றேன் என தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்பட்டவுடன் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்களுக்கு குடிபானமும் முகமாலை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் பணிப்புரையின் கீழ் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.