வெளிநாட்டு பணியாளர்களுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட நுழைவாயில் ஒன்று நேற்றைய தினம் (செப்.01) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ...
வெளிநாட்டு பணியாளர்களுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட நுழைவாயில் ஒன்று நேற்றைய தினம் (செப்.01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
HOPE GATE (நம்பிக்கை நுழைவாயில்) என்ற பெயரில் இந்த நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு செல்வோர் மற்றும் வேலை வாய்ப்புக்களில் ஈடுபட்டு மீள நாட்டிற்கு திரும்புவோருக்காக இந்த புதிய நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவோருக்கான அனைத்து வசதிகளும் இந்த நுழைவாயிலின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சு மேலும் கூறுகின்றது.