எதிர்வரும் பண்டிகை காலம் நிறைவு பெறும் வரை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும் என அத்தியாவ...
எதிர்வரும் பண்டிகை காலம் நிறைவு பெறும் வரை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ள நிலையில், அதன் பிரதிபலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம், அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை நேற்று முன்தினம் (ஒக்.28) முதல் 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை திறந்த வங்கி கணக்கின் ஊடாக கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சு நேற்று முன்;தினம் (ஒக்.28) அனுமதி வழங்கிய நிலையிலேயே, இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ள போதிலும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் இதுவரை குறைக்கப்படவில்லை என நுகர்வோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.