மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் (High Court Judges’ Association) தலைவராக மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவு செய்யப்...
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் (High Court Judges’ Association) தலைவராக மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முதன்முறையாக தமிழ்பேசும் மேல் நீதிமன்ற நீதிபதி, மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்துக்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சங்கத்தின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய உப தலைவரான மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி லால் ஆர் பண்டார செயலாளராகவும் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்
எம். சகாப்தீன் உதவிச் செயலாளராகவும் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ஜனாதி டீ அல்விஸ், பொருளாராகவும் பதிப்பாசிரியராக மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிக்கின்றனர்.