ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பால...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் அரசியலில் பயணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடாத்துவதற்கு, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா மாவட்டத்திலிருந்து கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்திலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இரகசிய வாக்கெடுப்பொன்றை அண்மையில் நடத்தியுள்ளார்.
”தற்போதைய நிலைப்பாட்டிலேயே இருப்பதா? அல்லது சவால்களை வெற்றிக் கொண்ட தலைவருடன் இணைவதா?” என்ற கேள்விகளுக்க இரகசிய வாக்கெடுப்பை நடத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால், யானை தம்மை தாக்காது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் கருத்துரைத்திருந்தார்.