வரவு செலவுத் திட்டத்தில் உள்ள திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளும...
வரவு செலவுத் திட்டத்தில் உள்ள திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட அறிக்கையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தான் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டார்.
அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய பல நீண்ட கால மற்றும் குறுகிய கால செயற்பாடுகள் உள்ளன.
இவை அனைத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறையின் யதார்த்தங்கள், அத்தகைய மூலோபாயத் திட்டத்தில் நாம் நகர்ந்தால் மட்டுமே ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும், எனவே நாம் அனைவரும் அதை ஆதரிப்பது முக்கியம் என்றார்.