தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் க...
தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக 600 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
அது அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம்கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.