யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று இரவு வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளன. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை கார...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று இரவு வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளன.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கில் அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் நேற்று இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டிலும்
அதிக மழையுடன் கடும் குளிர் நிலவிய அதேநேரம் அதிக காற்றும் வீசியது.
இதன் காணடமாக எங்கும் பல மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது இதன்போது
ஊர்காவற்றுறை மற்றும் காரைநகரில் இரு பனை மரங்கள் வீடுகளின் மீது வீழ்ந்தமையினால் இரு வீடுகளும் சேதமடைந்தன. இதேபோன்றெ மருதங்கேணி வத்திராயனில் ஓர் பனை முறிந்து வீதியில் வீழ்ந்த சமயம் சில வீடுகளிற்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப்பரப்பிறகுள் பலாலி வீதி, சுண்டுக்குழி, கயின்ரல், காலிஅபூபக்கர் வீதி ஆகிய இடங்களில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்து வீதியில் வீழ்ந்துள்ளன.