அருட் சகோதரிகளால் பராமரிக்கப்படும் யாழ்.உரும்பிராயில் அமைந்துள்ள அக்ஸிலியம் இல்லத்தில் உள்ள பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட மு...
அருட் சகோதரிகளால் பராமரிக்கப்படும் யாழ்.உரும்பிராயில் அமைந்துள்ள அக்ஸிலியம் இல்லத்தில் உள்ள பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட முப்பது பிள்ளைகளுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் இவ்வாண்டுக்கான இறுதி நிகழ்வாக மதிய போசனமும் கற்றல் உபகரணங்களும் 29/12/2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்,தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின்
நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் உதவிப் பணியாக,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ்.மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.