கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அரசியலமைப்பு ர...
கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக அரசியலமைப்பு ரீதியாக நாடாளுமன்றத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது எனவும், தேர்தல் சட்டத்தை மீறியமைக்காக அவருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பான சட்ட விவகாரம் முடிந்தவுடன் சுரேன் ராகவனும் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.