யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள...
யாழ்ப்பாணத்தில், பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவரிடமிருந்து 3 கிலோ 500 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.