முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை தனது 95வது வயதில் நித்திய இளைப்பாறியதாக வத்திகான் அறிவித்துள்ளது. வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிக...
முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகை தனது 95வது வயதில் நித்திய இளைப்பாறியதாக வத்திகான் அறிவித்துள்ளது.
வயோதிப நிலை மற்றும் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நித்திய இளைப்பாறினார்.ன
முன்னாள் பாப்பரசர் பெனடிக் ஆண்டகையின் இறுதி கிரியைகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகை, தனது வயது மற்றும் உடல் நிலையை காரணம் காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
குறிப்பாக கடந்த 600 ஆண்டுகளில் பாப்பரசர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தமை இதுவே முதற்தடவை என கூறப்பட்டது.
பாப்பரசர் 16ஆம் பெனடிக் ஆண்டகையின் இந்த அறிவிப்பு, பலரையும் ஆச்சரித்திற்கு உட்படுத்தியிருந்தது.
பாப்பரசர் ஒருவர் இறையடி எய்வதற்கு முன்னதாக பதவி விலகிய பாப்பரசராக பாப்பரகர் 12வது கிரிகோரி இருந்துள்ளார்.
உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், 1415ம் ஆண்டு அவர் பதவி விலகியதாக கூறப்படுகின்றது.