ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. மகதீர...
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.
மகதீரா, நான் ஈ, பாகுபாலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஜந்து மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன.