உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆண...
உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒப்புதல் வழங்காத மின்வெட்டுக்கு பாவனையாளர்கள் முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் - 0775687387
மின்னஞ்சல் - consumers@pucsl.gov.lk
தொலைநகல் 0112392641