உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிவாகை சூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவி...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிவாகை சூடும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், "உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் தயார்ப்படுத்தலில் மொட்டுக் கட்சி ஈடுபட்டுள்ளது.
வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. மொட்டுக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடும் கட்சிகள் தொடர்பான பேச்சுகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்த திகதிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வோம்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவு எதுவும் இன்றி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் மொட்டுக் கட்சியே வெற்றியடையும்" என தெரிவித்துள்ளார்.