நிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்...
நிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி உள்ளிட்ட பல வீதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.