இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சன் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முக்கிய தொடரில் இந்த நட்சத்திர வீரர் விலகி இருப்பது இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
இலங்கை T20 தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி: ஹர்திக் பாண்டியா(தலைவர்), இஷான் கிஷன் , ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை தலைவர்) , தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.