விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தால் அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நிறுவப்பட்ட சஞ்சீவி உற்பத்தி நிலையம் உத்தியோகபூர்வமாக...
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தால் அவுஸ்திரேலியன் எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நிறுவப்பட்ட சஞ்சீவி உற்பத்தி நிலையம் உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ் மாவட்ட பெண்கள் சமாசத்திடன் கையளிக்கப்பட்டது.
உள்ளூர் பெண் சுய தொழில் உற்பத்தியாளர்களை ஊக்கி விக்கும் முகமாக நிறுவப்பட்ட சஞ்சீவி மாதர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமானது விழுது நிறுவன திட்ட ஆலோசகர் கந்தசாமி ஐங்கரன் மற்றும் திட்ட உத்தியோகத்தர் வேந்தன் சர்மிளா ஆகியோரின் பங்குபெற்றலுடன் மாவட்ட பெண்கள் சமாசத்திடம் கையளிக்கப்பட்டது.