போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண் ட்ரோன் கருவி நவீன ஸ்கானர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்...
போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண் ட்ரோன் கருவி நவீன ஸ்கானர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளை அளக்கின்ற இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டன.
மேலும் இச்சந்தேக நபர் அக்கரைப்பற்று நிந்தவூர் கல்முனை பெரிய நீலாவணை மருதமுனை சம்மாந்துறை பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கின்ற பிரதான வியாபாரி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து கைதான சந்தேக நபரின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடுகள் பொலிஸாரின் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களான சகோதரன் சகோதரியை கைது செய்துள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது கல்முனை பகுதி செயிலான் வீதியில் அமைந்துள்ள சந்தேக நபரின் சகோதரியின் வீடு மற்றும் சாய்ந்தமரது பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீடும் பொலிஸ் குழுக்களினால் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இதன் போது 2 அதி நவீன ஸ்கானர்கள் சிசிடிவி டிவீஆர் உபகரணம் பதிவு செய்யப்படாத ட்ரோன் பறக்கும் சாதனம் உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.