வட பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிஞர்கள் குழாமொன்று உருவாக்கப்பட்ட...
வட பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் கடற்றொழிலாளர் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிஞர்கள் குழாமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாச தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார்.
வடக்கில் கடற்றொழில் சமூகங்களை சேர்ந்தவர்களும் சமாசங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் ஈடுபட்டு குறித்த குழுவை உருவாக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆலோசனை வழங்குவதற்கான அறிஞர் குழுவில் அகிலன் கதிர்காமர், சூசை ஆனந்தன்,செல்வின் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
குறித்த மூவருக்கு அப்பால் கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்க ஏனைய அறிஞர்கள் முன்வரவேண்டும் என்றார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.