ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று யாழ்ப்பாணம் றக்கா வீதியில் ...
ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள இளங்கதிர் சனசமூக நிலைய விளையாட்டுத் திடலில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது சஜித் பிரேமதாசவுக்கு மலர்தூவி பாரம்பரியமான முறையில் மங்கள வாத்தியங்கள் முழங்க பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ், யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அமைப்பாளர் விஜய்காந்த், யாழ் மவட்ட அமைப்பாளர் கு.மதன்ராஜ், தொகுதி அமைப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு சந்திப்புக்களிலும் சில மக்கள் கூட்டங்களிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.